dcsimg
Image of Asiatic Dewflower
Creatures » » Plants » » Dicotyledons » » Spiderwort Family »

Asiatic Dewflower

Murdannia spirata (L.) G. Brückn.

மருதானியா ஸ்பைரேடா ( Tamil )

provided by wikipedia emerging languages

மருதானியா ஸ்பைரேடா (Murdannia spirata) அல்லது பொதுவாக ஆசியாவின் பனித்துளி மலர் (Asiatic dewflower) என்ற தாவரம் வெப்பமண்டல பகுதியில் வளர்கின்றது. இதன் தாயகம் சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் ஆகும். இத்தாவரம் தற்பொழுது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இயற்கையாக வளர்கிறது. இத்தாவரம் 1965 ஆம் ஆண்டு இங்கிருந்து சேகரிக்கப்பட்டது. ஆசியாவில் ஈரமான பரந்த நிலப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் இத்தாவரம் காணப்படுகிறது. இத்தாவரம் புளோரிடா மாநிலத்தில் பனை சதுப்புநிலம் மற்றும் ஈரமான சதுப்பு நில புல்வெளிப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளது.

மருதானியா ஸ்பைரேடா பல்லாண்டு வாழும் சிறு செடி வகையாகும். இதன் இலைகள் ஈட்டி வடிவ முனையுடன் கூடிய நீள்வட்ட வடிவம் கொண்ட பற்றி வளரும் கொடியாகும். இதன் பூக்கள் வெளிர் நீல நிறமுடையது.[3][4]

மேற்கோள்கள்

  1. Tropicos
  2. The Plant List
  3. Brückner, Gerhard., in H. G. A. Engler and K. Prantl, Die naturlichen Pflanzenfamilien, zweite Auflage. 15a: 173. 1930.
  4. Linnaeus, Carl von.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மருதானியா ஸ்பைரேடா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மருதானியா ஸ்பைரேடா (Murdannia spirata) அல்லது பொதுவாக ஆசியாவின் பனித்துளி மலர் (Asiatic dewflower) என்ற தாவரம் வெப்பமண்டல பகுதியில் வளர்கின்றது. இதன் தாயகம் சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் ஆகும். இத்தாவரம் தற்பொழுது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இயற்கையாக வளர்கிறது. இத்தாவரம் 1965 ஆம் ஆண்டு இங்கிருந்து சேகரிக்கப்பட்டது. ஆசியாவில் ஈரமான பரந்த நிலப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் இத்தாவரம் காணப்படுகிறது. இத்தாவரம் புளோரிடா மாநிலத்தில் பனை சதுப்புநிலம் மற்றும் ஈரமான சதுப்பு நில புல்வெளிப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளது.

மருதானியா ஸ்பைரேடா பல்லாண்டு வாழும் சிறு செடி வகையாகும். இதன் இலைகள் ஈட்டி வடிவ முனையுடன் கூடிய நீள்வட்ட வடிவம் கொண்ட பற்றி வளரும் கொடியாகும். இதன் பூக்கள் வெளிர் நீல நிறமுடையது.