dcsimg
Image of Atlas Daisy
Creatures » » Plants » » Dicotyledons » » Composite Family »

Atlas Daisy

Anacyclus pyrethrum (L.) Link

அக்கராகாரம் ( Tamil )

provided by wikipedia emerging languages

ஸ்பெயின், அரேபியா, ஜெர்மனி, எகிப்து, கனடா போன்ற நாடுகளிலும் வங்க தேசத்திலும் பயிராகும் இந்த மூலிகைக்கு அக்கார்கரா, ஸ்பானிஷ் பெல்லிடோரி, அக்கரம் எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் இதனை முக்கிய மூலிகையாகப் பயிர் செய்கிறார்கள். அக்கராகாரம் வேர் காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி நன்கு உலர்த்தி, பதப்படுத்தப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த நிலையில் உள்ள இந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

பெயர்

இத்தாவரமானது அக்கிராகாரம், அக்கராகாரம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘கார்ப்புச் சுவை’ கொண்ட மூலிகை என்பதால் இது அக்கர‘காரம்’ என்று பெயர் பெற்றது.

விளக்கம்

இதன் மலர்கள் மஞ்சள் நிறப் புள்ளிகள் தூவப்பட்டது போலக் காட்சி தரும். இது, மிகச் சிறிய பூப்பந்தோடு உருவகப்படுத்தக்கூடியதுபோல இருக்கும். இந்த செடியானது ஒரு சிறு செடியினமானமாகும். இது காரமான வேர்களைக் கொண்டிருக்கும்.[3]

மேற்கோள்கள்

  1. Botanic Garden and Botanical Museum Berlin-Dahlem. "Details for: Anacyclus pyrethrum". Euro+Med PlantBase. Free University of Berlin. பார்த்த நாள் 2008-06-16.
  2. "Anthemis pyrethrum record n° 135636". African Plants Database. Natural History Museum of Geneva and Tela Botanica. பார்த்த நாள் 2008-06-16.
  3. டாக்டர் வி.விக்ரம் குமார் (2018 நவம்பர் 24). "இனிய ஆரோக்கியத்துக்கான ‘காரம்!’". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 1 திசம்பர் 2018.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அக்கராகாரம்: Brief Summary ( Tamil )