dcsimg

வீனஸ் பூக்கூடை ( Tamil )

provided by wikipedia emerging languages

வீனஸ் பூக்கூடை (Venus' flower basket, Euplectella aspergillum) என்பது ஆழமான கடலில் பகுதியில் வசிக்கும் ஒரு வகை கடல்பஞ்சு ஆகும். பாரம்பரிய ஆசிய கலாச்சாரங்களில், இந்த குறிப்பிட்ட கடற்பஞ்சை ( இறந்து, உலர்ந்த நிலையில்) திருமண பரிசாக வழங்குகின்றனர் ஏனெனில் கடற் பஞ்சுக் கூடையினுள் அதன் இறுதிக்காலம்வரை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இறால் என இரண்டு சிறிய இறால்கள் வாழ்ந்து மடிந்து இருக்கும், வீனஸ் பூக்கூடை சிறிய அளவில் இருக்கும்போது இதற்குள் இரை தேடி இறால் மீன் குஞ்சுகள் உள்ளே வந்து விடுகின்றன. அதுவும் ஆணும், பெண்ணுமாக இரண்டு இறால் மீன் குஞ்சுகள் பூக்கூடை கடற்பஞ்சுக்குள் எப்படியும் வந்துவிடும். இந்த பூக்கூடைக்குள் ஒளி உமிழும் தன்மை இருக்கிறது. கண்ணாடி இழைப் பூச்சிகள் தங்களுடைய ஒளி உமிழும் திறனால் மற்ற சிறிய உயிரினங்களைக் கவர்ந்திழுத்து உணவாக்கிக் கொண்டு அனுப்பும் மீதி உணவுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் சாப்பிட்டு இந்த இறால் மீன்கள் உயிர் வாழ்கின்றன . பின்னால், வீனஸ் பூக்கூடை தங்கள் கண்ணாடி இழைகளால் இறால்களையும் சேர்த்து மூடி விடுகின்றன. இறால் மீன்களும் பெரிதாக வளர்ந்து விடுவதால் அவைகளால் வெளியே வர முடிவதில்லை. கடைசி வரை இறால்கள் பூக்கூடைக்குள் இணைந்தே வாழ்கின்றன. அங்கேயே அவை இனப்பெருக்கம் செய்கின்றன, அவற்றின் குஞ்சுகளும், இதேபோல தங்களுக்கான சொந்த வீனஸ் மலர்க் கூடைகளைக் கண்டுபிடித்து அங்கு சென்றுவிடுகின்றன. வீனஸ் பூக்கூடை இறக்கும்போது இறால்களும் இறந்து போய்விடுகின்றன. இறந்து காய்ந்து போன வீனஸ் பூக்கூடைகள்தான் ஜப்பானில் பரிசளிக்கப்படுகின்றன. திருமணத்தில் இணையும் தம்பதிகள் இறுதிவரை இணைந்தே வாழ வேண்டும் என்பதன் காரணமாக இந்த வீனஸ் பூக்கூடைகளைப் பரிசாக வழங்குகிறார்கள்.

இவை விக்டோரியன் கால இங்கிலாந்தில் மிகவும் பிரபலமாக இருந்தன, மேலும் இதன் விலை அப்போது ஐந்து கினி நாணயங்களாகும் இது இன்றைய £ 500 க்கு இணையானது..

இது ஜப்பானில் விலைமதிப்பற்ற திருமண பரிசாக * கொடுக்கப்பட்டிருக்கிறது, 'இறப்பு வரை பிரிவு இல்லை' என்ற கருத்தை இது அடையாளப்படுத்துகிறது *.

காணப்படும் இடங்கள்

கடல் பஞ்சு, மேற்கு பசிபிக் கடலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் ஆழமிக்க பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலிலும் வீனஸ் பூக்கூடையைப் பார்க்க முடியும்.

உருவியல்

 src=
லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின், சேகரிப்பில்

வீனஸ் பூக்கூடையானது கண்ணாடி இழைகளைக் கொண்டு கைகளால் பின்னப்பட்டது போலப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உண்மையில் இது ஒரு கடல் பஞ்சு. இவை அறுகோண வடிவில் நீண்டு இருக்கும். இந்த பூக்கூடைகள் கண்ணாடி இழைகளால் ஆனவை கடல் பஞ்சுகள் போகிற போக்கில் கண்ணாடி இழைகளைக்கொண்டு இக்கூடையை எளிதாக தயாரித்து விடுகின்றன. உண்மையில் சிலிக்கன் என்கிற தனிமத்திலிருந்துதான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கடல் பஞ்சு கடல் நீரில் இருக்கக்கூடிய சிலிசிக் அமிலத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிலிகாவாக மாற்றுகிறது. இந்தச் சிலிகாவிலிருந்து கண்ணாடி இழைகளைத் தயாரித்து, பெரிய வலை பின்னலை உருவாக்கி, அழகிய கூடு போல மாற்றுகிறது.

இவை உருவாக்கும் கண்ணாடி இழைகள் தலைமுடி போல மெலிதாக, துல்லியமாக இழைகளை உருவாக்கிக் கூடுகளை நெய்துகொள்கின்றன. ஒவ்வொரு கண்ணாடி இழையின் நீளமும் 5 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் நீளம் வரை இருக்கும். இப்படித்தான் உயிருள்ள கண்ணாடி இழைகளை இந்தக் கடல் பஞ்சு உருவாக்குகிறது. இந்த இழைகளில் உள்ள குண்டூசி போன்ற அமைப்பு இந்த இழைகள் வலிமையாக நிற்பதற்கு உதவுகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. ஆதலையூர் சூர்யகுமார் (2017 மே 10). "பரிசாக மாறும் பூக்கூடை பூச்சி". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 12 மே 2017.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வீனஸ் பூக்கூடை: Brief Summary ( Tamil )