dcsimg

கரப்பான் ( тамилски )

добавил wikipedia emerging languages

கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.[1][2] அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.[3][4][5]

மேற்கோள்கள்

  1. "NATURE. Critter Guide. Cockroach. | PBS". pbs.org (2011 [last update]). பார்த்த நாள் 5 February 2011.
  2. "Fact or Fiction?: A Cockroach Can Live without Its Head: Scientific American". scientificamerican.com (2011 [last update]). பார்த்த நாள் 6 February 2011.
  3. "Termites are 'social cockroaches'". BBC News. 13 April 2007. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6553219.stm. பார்த்த நாள்: 5 February 2011.
  4. Eggleton P. et al. 2007. Biological Letters, June 7, cited in Science News 171 p318
  5. "Termites are cockroaches after all - Natural History Museum". nhm.ac.uk (2011 [last update]). பார்த்த நாள் 5 February 2011.

மேலும் பார்க்க

பூச்சிகள் பட்டியல்

 src=
கரப்பான் பூச்சி
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

கரப்பான்: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages